பவி - அடி பாவி

அடியே வடக்க பொறந்து வளந்த எஞ் செல்லப் பேத்தி பாவி, இங்க வாடி.
😊😊😊😊
யாரப் பாட்டிம்மா 'பாவி'ன்னு சொல்லறீங்க? என்ன பாவஞ் செஞ்சாங்க.
😊😊😊😊😊
எம் பேத்தித்தான்டி பாவி, மருதாணி.
😊😊😊😊
நேத்து வடநாட்டில இருந்து வந்தாளே உங்க பேத்தி, அவ பேரா பாவி? என்ன அநியாயம் பாட்டிம்மா. கல்யாணம் ஆகாத பொண்ணு; வாழவேண்டிய உங்க சொந்தப் பேத்திய 'பாவி'- ன்னு சொல்லறீங்க?
😊😊😊😊
ஏன்டி எஞ் செல்லப் பேத்திய நானே 'பாவி'ன்னு சொல்லுவேனா? அவ பேரு பாவி. 'பாவி'யப் பாவின்னுதானே கூப்பிடணும். 'புண்ணியவதி'ன்னா கூப்பட முடியும்.
😊😊😊😊😊😊
இதோ, பாவியே வர்றா அவள உம் பேரென்னன்னு நீயே கேளு.
😊😊😊😊😊
உம் பேரு என்னடி
😊😊😊😊😊
எம் பேரு பவி (Bavi).
😊😊😊😊
பாட்டிம்மா ஏன் உன்ன 'பாவி' -ன்னு கூப்படறாங்க?
😊😊😊😊😊😊
அவுங்க காதுல எதோ கோளாறு. அதான் எம் பேர 'பாவி' -ன்னு.
😊😊😊😊😊
உம் பேருக்கு என்னடி அர்த்தம்?
😊😊😊😊😊
'பவி' -ன்னா 'எதிர்காலம்'ம்னு அர்த்தம். நீங்க தமிழ்நாட்டுக்காரங்கதான் அர்த்தம் தெரியாத, உங்களால உச்சரிக்க முடியாத இந்திப் பேருங்கள வச்சுக்கவீங்க. நான் உத்தரகாண்ட் மாநிலத்திலே பொறந்து வளந்திட்டு இருக்கற கல்லூரி மாணவி தமிழச்சி. நாங்கெல்லாம் அர்த்தம் தெரியாத இந்திப்பேர வைக்கமாட்டோம்.
😊😊😊😊😊
சரீடியம்மா 'எதிர்காலம்'.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Bavi (Bavishya) = Future

எழுதியவர் : மலர் (17-May-18, 11:19 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே