வாடா வெரலு

என்னங்க பாட்டிம்மா பெரியப்பா அவரோட கடைசிப் பையன வெரலுன்னு கூப்படறாரு?
########
அடியே எம் பெரிய மகன் நம்ம தமிழ்க் கடவுள் முருகனோட தீவிர பக்தன். தன்னோட கடைசிப் பையனுக்கு 'வெற்றிவேல்' -ன்னு பேரு வச்சான். என் பேரன் வெற்றி வடக்க போயி 3 வருசம் வேல பாத்தான். அவங்கூட வேல பாக்கற இந்திக்காரங்க எல்லாம் இவன் பேரச் சரியாச் சொல்லத் தெரியாம 'வேட்டிவாலா, வேட்டிவாலா' ன்னு இல்லன்னா "வெட்டிவாலு" -ன்னு சொல்லறாங்களாம். எம் பேரன் வெற்றி அவுங்க உச்சரிக்கற மாதிரி அவுங்களையே அவனுக்கு ஒரு பேரை வைக்கச் சொன்னானாம். அந்த இந்திக்காரங்க நம்ம வெற்றிக்கு 'வெரல்' - ன்னு பேரு வச்சுட்டாங்களாம்.
#######
பெரியப்பா எப்பிடி இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒத்துட்டாரு?
😊😊😊😊😊😊
அவன் பேர மாத்திட்டாலும் அவன எம் மகன் "வெற்றிவேல" -ன்னுதான் கூப்படறான். கோவமா இருந்த மட்டும் அவனை எரிச்சலில் " டேய் வேரலு இங்க வாடா" -ன்னு கூப்படறான். அந்த 'வெரல்"-(விரல்)லுக்கு அருமையான அர்த்தமெல்லாம் இருக்குதாம்.
😊😊😊😊😊😊
இருங்க பாட்டிம்மா, நான் அண்ணனைக் கூப்பிடறேன்.
விரல் அண்ணா இங்க வாங்க.
😊😊😊😊😊
என்ன தாமரை, நல்ல இருக்கறயா?
நீயாவது என்ன 'விரல்' னு கூப்படறயே ரொம்ப சந்தோசம்டா கண்ணு.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Viral = priceless, valuable, precious, rare.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க. திரைத் தமிழைத் தவிர்ப்போம் (கலப்படத் தமிழ்)

எழுதியவர் : மலர் (19-May-18, 2:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 82

சிறந்த நகைச்சுவைகள்

மேலே