ரமேஷ்-சுரேஷ் உரையாடல்- இன்றைய காதலர்கள் விமரிசனம், சிரிக்க-சிந்திக்க
ரமேஷ் : சுரேஷ், ஒன்னு நீ கவனிச்சயா
நம்ம நாளிலே, காதலர்கள்
கடற்கரையில் எங்கேயாவது
அத்தி பூத்தாப்போல இங்கேயும்
அங்கேயும் இருந்தனர்....இல்லாவிடில்
சினிமா கொட்டகையில்........
இப்போதெல்லாம் இவர்கள்
காதலை குத்தகை எடுத்தாப்போல
தெரு ஓரங்கள், பூங்கா, ரயில்
ப்லாட்போர்ம், பேச்சில் பரவலாய்
என்று மிக அதிகமாக இருப்பது
என்னை என்னமோபண்ணுகிறது
ஹும்.....விவஸ்தைக்கட்ட
ஜென்மங்கள்...........
சுரேஷ் : ஏம்பா இப்படி சலுத்துக்கற-உன்
இளவயதில் உனக்கு காதலிக்க
தோணவில்லைப்போலும்.....
அடேய், காதலிப்பது ஒரு போதும்
தவறாகாது......இளமைப்பருவத்தில்
காதல் இயற்கையின் அன்பளிப்பு
ஆனால் அதை இடம்,பொருள்,ஏவல்
அறிந்து தமக்குள் வைத்துக்கொள்ளல் நல்லது ; அதை பலர் முன்னிலையில்
வெளிப்படுத்தல் ....காதல் விவரம்
விகாரம்...........அதுதான் இப்போதெல்லாம்
நம் நாட்டில் பரவிவரும் விஷ
காய்ச்சல் .
ரமேஷ் : ஆஹா, அருமை, நண்பா, மிக
சரியான வார்த்தைகள் ;ஆனால்
யார் இதை கேட்பார்.>?