கோபம் வேண்டாமடி செல்ல மீரா

இதயத்தை ஆளுகிறாய்
உயிரினில் வாழுகிறாய்
இசையுடன் கவிதைகளாய்ப்
பூத்துச் சிரிக்கிறாய்.... நீ என்
இயற்கையை வடிவமைத்து
இணைந்து கொள்கிறாய்..

உயிர்கள் ஒன்றிணைந்து
உவக்கும் காதலிலே
பொய்யாய் நடப்பதற்கு
வழியில்லையே...
உண்மை இதுதெரிந்தும்
உள்ளம் சினமடைந்தால்
உரிமை கொள்வதற்கு
மொழியில்லையே
குழந்தை போல்தவிக்கும் நிலைபாரம்மா...
குலுங்கும் சிற்றுயிரின் ஒலிகேளம்மா...
கோபம் வேண்டாமே என் செல்லம்மா...
இதயத்தை ஆளுகிறாய்
உயிரினில் வாழுகிறாய்
இசையுடன் கவிதைகளாய்ப்
பூத்துச் சிரிக்கிறாய்... என்
இயற்கையை வடிவமைத்து
இணைந்து கொள்கிறாய்..

உனக்குள் கரைந்தமனம்
உனக்குள் கரைந்த உயிர்
உனக்கே உன்னிடமே
ஆயுள் முழுவதும்...
எனக்குள் என்னுயிர்க்குள்
கலந்த என்மீரா
கண்ணன் ஒருவனுக்கே
காலம் முழுவதும்...
இதயமும் இரத்தமும்
வேறில்லையே...
இரண்டும் வேறானால் உயிரில்லையே..
உன்னுயிரும் என்னுயிரும்
தனித்தில்லையே..

இதயத்தை ஆளுகிறாய்
உயிரினில் வாழுகிறாய்
இசையுடன் கவிதைகளாய்ப்
பூத்துச் சிரிக்கிறாய்...என்
இயற்கையை வடிவமைத்து
இணைந்து கொள்கிறாய்...

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (18-May-18, 9:44 am)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 71

மேலே