அழகு மன்னவன்

இயற்கையிலேயே அமைந்த
வில் புருவம் அழகு....

பெண்மையைக் கண்ணியமாய்ப்
பார்க்கும் கண்கள் அழகு.....

ஒற்றைப் பல் உள்வாங்க
மாறி அமைந்த
பல்வரிசை அழகு.....

மாநிறம் அழகு .....

பயமுறுத்தாத மீசை அழகு.....

இதழ்களில்
பூத்த புன்னகை
கண்களில் மிளிர்வது அழகு....

என்னிடம் மட்டும் கெஞ்சும்
உன் நெஞ்சம் அழகு....

மொத்தத்தில்
என் அழகு மன்னவன் நீ...

எழுதியவர் : கீர்த்தி (18-May-18, 9:33 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : alagu mannavan
பார்வை : 180

மேலே