கூண்டுக் கிளி

கூட்டில் அடைபட்ட கிளி
நினைத்ததாம்,இப்படி
சிறகொடித்து சித்திரவதை
செய்து பேசியதை பேசவைக்கும்
மனிதா, உன்னைப்போல்
முழுவதுமாய் பேசிட
கடவுளை வேண்டி நிற்கின்றேன்
அப்படி அந்த வரம் அவன்
எனக்களித்தால் நான் பேசும்
முதல் வரிகள் என்னவென்று தெரியுமா
உனக்கு, அவையே, "ஆறறிவு பெற்று
உனக்கேன் எனைப்பூட்டி வைக்கும்
ஐந்தறிவு, வெட்கமில்லையா உனக்கு,
இன்றோடு விட்டுவிடு என்னை
சுதந்திரமாய் வாழ விடு"

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-May-18, 10:03 am)
பார்வை : 87

மேலே