வால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்

இந்தியாவை மையாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் சுமார் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்துப் பிளிப்கார்ட் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் பிளிப்கார்ட், அடித்த 5 வருடத்திற்கும் லாபத்தை அடையும் என்னும் நம்பிக்கையில்லாமல் இயங்கி வரும் இந்நிறுவனத்தை 16 பில்லியன் டாலர் என்னும் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வாங்கி இருப்பது ஆச்சரியம் தான்.

இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வால்மார்ட் வாங்குவதில் இந்நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியில் பல லாபம் இருந்தாலும், இதனால் இந்திய மக்களும், விவசாயிகளுக்கும் சில லாபம் இருப்பதாகத் தெரிகிறது.

போட்டி

இந்தியாவில் அமேசான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பிளிப்கார்ட் வாயிலாக வால்மார்ட் நிறுவனமும், பேடிஎம், பிக்பேஸ்ட் வாயிலாகச் சினாவின் அலிபாபாவும் வர்த்தகக் களத்தில் உள்ளது.

இதன் மூலம் இந்திய வர்த்தகச் சந்தையில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

28 நாடுகள்

அமேசான் மற்றும் வால்மார்ட் சுமார் 28 நாட்டில் விவசாயிகளுடன் இணைந்து மக்களுக்கு நேரடியாகக் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்து அசத்தி வருகிறது.

இதை இந்தியாவில் செய்யவும் அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.

ரிலையன்ஸ் தோல்வி

வால்மார்ட் அமேசான் போலவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ரீடைல் வர்த்தகப் பிரிவின் வாயிலாக ரிலையன்ஸ் பிரஷ் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்கிறது. ஆனால் வால்மார்ட் போலப் பெரிய அளவிலான வெற்றியை ரிலையன்ஸ் பெறவில்லை.

வால்மார்ட்

வால்மார்ட் தற்போது இந்தியாவில் 21 கடைகளை வைத்துள்ளது, இதனுடன் அடுத்த 5 வருடத்தில் புதிதாக 50 கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் வாயிலாக இந்நிறுவனத்திடம் இருக்கும் சப்ளை செயினைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் தனது பொருட்களை டெலிவரி செய்ய வால்மார்ட் நிறுவனத்தால் முடியும்.

மிகப்பெரிய மாற்றம்

வால்மார்ட் களத்தில் இறங்கியுள்ளதால் வர்த்தகத்தில் கிரானா கடைகள் அதாவது மளிகை கடைகளின் சரக்கு மேலாண்மை, டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்பம் பெரிய அளவில் மேம்படும்.

மேலும் ஈகாமர்ஸ் சந்தையில் தற்போது துவங்க இருக்கும் வர்த்தகப் போராட்டம் இந்திய நுகர்வோர் சந்தை மற்றும் விவசாய வர்த்தகத்தில் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வரும்.

97 சதவீத பொருட்கள்

தற்போதைய நிலையில் வால்மார்ட் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் 95 சதவீதம் இந்தியாவிலேயே வாங்கப்பட்டது தான். இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டுக்கு 4-5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதியும் செய்கிறது.

லாபம்

ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாய்க்கு வாங்கினால் இதில் 5 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்குக் கிடைக்கும். விவசாயிகளிடம் இருந்து மண்டி, மண்டியில் இருந்து கடைகளுக்கு வரும் வரையில் அவர் அவர்களுக்கான லாபத்தைச் சேர்ந்துவிடுகிறார்கள் இதன் வாயிலாக 5 ரூபாய் உருளைக் கிழங்கு 20 ரூபாய்க்கு மக்கள் வாங்க வேண்டியுள்ளது.

15 ரூபாய் என்னும் இடைவெளி சற்று அதிகமாகவே உள்ளது.

ஆய்வு

மேலும் சந்தை மற்றும் விலைவாசி குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில் உலக நாடுகளில் சூப்பர்மார்கெட் அதிகமாக இருக்கும் இடங்களில் தான் இந்த இடைவெளி குறைவாக இருக்கிறது.

முடிவு

வால்மார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருவதால் நன்மைகள் உடன் சில பிரச்சனைகளும் உள்ளது. இதுஎல்லா இடத்திலும் இருப்பது தான்.

அனைத்தும் விவசாயிகளுக்குச் சாதகமாக அமையும் என்று நம்புவோம்.



Written By: Prasanna VK

எழுதியவர் : (18-May-18, 7:43 pm)
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே