காதல்

காதலியைத்தேடி அலைந்தேன்
என் முன்னே காலம் ஓட

ஓடி ஓடி அலுத்ததுதான் மிச்சம்
தேடியவள் கிடைக்கவில்லை
என் முன்னே காலம் ஓட

இளமையும் போனது இன்னும்
நான் தேடும் காதலி எனக்கு
எங்கும் தெரியவில்லை
என் முன்னே காலம் ஓட

என்னை இப்போது
நிலைக்கண்ணாடி முன் பார்த்தேன்
மூப்பின் சாயல் தெரிந்தது முகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நரைத்த முடி , காதல் தேடலை
விட்டு விட்டு காலதேவதையே
வெற்றி உனக்கு என்று எண்ணியபோது

அவள் அந்த அவள் நான் தேடிய
என் மனதில் நான் வரைந்துவைத்த
தேவதை என் முன்னே காட்சி
தந்தாள் , நான் தேடும் என்னவனல்லவோ
நீ என்று கூறி, நான் சற்றும்
எதிர்பார்க்கும் முன் திறந்த என்
கரத்தில் வந்து என்னை அணைக்க
இது என்ன கனவா நெனவா என்று
எனையே நான் கிள்ளி பார்க்க
ஆச்சரியம், அது கனவல்ல ,நெனவே!

இப்போது மீண்டும் நிலைக்கண்ணாடி
முன் நான் என்னைப் பார்க்க
நம்ப முடியவில்லை என் இளமை
மீண்டும் என் முகத்தில் நரை மட்டும்
போகவில்லை , மறைத்துவிடலாம்!
என் முன்னே ஓடும் காலம்
நீ ஓடி எனக்கு மூப்பு தந்தாலும்
காலமே, என்னவள் என்னைத்தேடி
தானே வந்து 'என் காதலி'என்றாள்
நான் தேடிய காதலி கிடைத்தாள்
இனி மூப்பு தான் என் செய்யும்
வெற்றி எனக்கா இல்லை உனக்கா
நீயே சொல்லு , மூப்பு எம்மை
இனி கரைத்தாலும் எங்கள்
காதலை நீ தீண்டமுடியாது
இப்போது எம் முன்னே காலம் ஓட
'காதல் வெற்றியில் காதலர்கள்
நாங்கள் ......................
'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-May-18, 12:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே