காதலனே உன்னால்

உன்னை பார்த்தவுடனே பட்டாம்பூச்சியாய் பறந்துவிட்டதடா என் மனம்
நீ ரோஜாப்பூக்களை என் கையில் தந்து காதலிக்கிறேன் என்று கூறும் பொழுது
நானும்தான் என்று உன்னை தழுவ நினைத்தேனடா - ஆனால்
பெண்மையின் நாணம் என்னை தடுத்துவிட்டதால்
இல்லையென உதட்டளவில் உரைத்துவிட்டேன்
மீண்டும் நீ என் அருகில் வந்து நின்ற பொழுது
உன் கரம் பிடித்து இப்பொழுதே இந்த
உலகம் யாவையும் சுற்ற நினைத்தேனடா - ஆனால்
ஆசைகள் யாவையும் அடக்கிக்கொண்டு அமைதியாகிவிட்டேன்
மறுபடியும் நீ என்னிடம் வந்து
என்னை ஏற்றுக்கொள் என கெஞ்சிய போது
உன் குறும்பு தனத்தை ரசீக்க விரும்பினேன்னடா - அதனால்
விளையாட்டாய் மாட்டேன் என்று மறுத்துவிட்டேன்
நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன் என கூறி
நீ விஷத்தை கையில் எடுத்த பொழுது
காதலனே என்று கூறி உன்னை கட்டியணைத்துவிட்டேனடா
என் வெட்கம் நாணம் எல்லாத்தையும் காதலனே உன்னால் கலைத்துவிட்டேனே
இனி காலம் உள்ள வரையிலும் நாம் காதலர்களாய் வாழ்த்திருப்போமே என் அன்பே !!!