கடல் உழவர் இவர் -மீனவர்
அலைக் கடலே இவர்கள்
உழு நிலம்
களைநீக்கல்,உழுதல்
விதைத்தல், நாற்று நடுதல்
ஏதும் இல்லை இங்கு
ஆனாலும் இவரும் உழவரே
இவரும் வானை நம்பித்தான்
வாழ்கின்றார்-மாமழை, சூறாவளி
இவர்கள் வாழ்விற்கு எதிரிகளே
இவர்கள் உழு நிலத்தில் போகம்,
வருடம் முழுவதுமே -சாகுபடியோ
அவரவர் உழைப்பில்,அதிர்ஷ்டத்தில்
தினமும் ஆயின் உண்டு சாகுபடி
இவரும் உழவரே
நெய்தல் நிலத்தவர்
கடலே இவர் உழும் நிலம்
நமக்கெல்லாம் மீனோடு உப்பும்
தந்து நம்மை வாழவைப்பவர்
கடலே இவர்கள் தொழும் தெய்வம்
இவரே கடல் உழவர் -மீனவர்
உப்பிட்டவரை நினைப்போமா
உயிர் உள்ளவரை.