ஓஹோ என் மழையே

வருடி விட்டு செல்லும் தென்றல் ....என்னை
வலுக்கட்டாயமாக வரவேற்றதே அதோடு ஆட .....

ஓஹோ ....
என் மழையே
நீ வாராயோ ..!

நேராக சீவி முடிந்த என் சிகை அலங்கரத்தை
நொடிக்குள் களைத்து விட்டு சென்றதே ...

ஓஹோ ..
என் மழையே ...
நீ வாராயோ ..!

பால் போல் இருந்த வானம் - அடடா ...என்
பர்தாநிறம் ஆனதே ....

ஓஹோ ...
என் மழையே ..
நீ வாராயோ ..!

மின்சாரம் போனதாலோ என்னமோ ......
மின்னல் வந்துஒளி கொடுத்ததே ....!

ஓஹோ ...
என் மழையே ..
நீ வாராயோ ..!!

நான் நித்தமும் ரசிக்கும் போதெல்லாம் - ஒரு புன்னகை
தவழவிட்டு நாணி தலைகுனியும் ....
எதிர் விட்டு ...மருதாணிச்செடி .....இன்றோ
"சிங்கம் டான்ஸ் " ஆடுகிறதே ......

ஓஹோ ..
என் மழையே ..
நீ வாராயோ ..!

நோன்பின் களைப்பால் ...
நேரம் அறியா நெடுந்தூக்கத்தில் ...
இருந்த என்னை .....
பல ரகளைகளை செய்து ..புத்துணர்வோடு
எழ வைத்தாயே....!

ஓஹோ ..
என் மழையே ..
நீ எனக்கு எனர்ஜி டானிக்கடா

நீ வரும் ..சமிக்கை தெரியும் போதே ......அய்ய்யோ....
என்று அலறிக்கொண்டு ....
காய்ந்த துணியை
எடுக்கச்செல்லவே......
மாடியில் காயப்போட்டேனடா ...
ரெண்டே துணிகளை ....!!!

ஓஹோ ...
என் மழையே ..
உனக்காக ....சில பித்தலாட்டங்க்கள் ....
.

நீ வந்து ....என் மேல் விழுந்து
இருவரும் ஒன்றாகி ......
யாருமில்ல ....வெட்ட வெளியில் ......
நாம் காதல் தேன் சொட்டிக்கொண்டிருந்தே ....

ஓஹோ ...என் மழையே ...
இந்த நாளை என்றும் மறவேனாடா......!!

மீண்டும் ....உந்தன் வருகைக்காக
காத்திருக்கும் .....
உந்தன் காதலி ....
*****ஹும்ஸ்****

எழுதியவர் : ஹும்ஸ் (23-May-18, 12:22 pm)
Tanglish : oho en mazhaiyae
பார்வை : 2718

மேலே