காதல்

சந்திரன் உன்
முகத்தில் தஞ்சம்
கயலும் மானும்
உன் விழிகளில் தஞ்சம்
கார்முகிலோ உந்தன்
கருங் குழலில் தஞ்சம்


இசைக்க குயில்
உந்தன் குரலில் தஞ்சம்
ஆழ்கடல் முத்து
உன் பற்களில் தஞ்சம்
பவளம் உன்
இதழ்களில் தஞ்சம்
அன்னமும் மயிலும்
உன் கால்களில் தஞ்சம்
சிற்றோடை உந்தன்
சலங்கையில் தஞ்சம்
அன்னமும் மயிலும்
உந்தன் கால்களில் கொஞ்சும்

பெண்ணே, உன் மனமோ,
என் மனதில் தஞ்சம்,
என்று பேசுகிறதே
உந்தன் பார்வை இன்று,
ஒத்துக்கொள்வாயா சொல்
இதில் தோல்வி ஏதுமில்லையடி
உனக்கு,ஒத்துக்கொண்டேன்
என்று சொன்னால் பெண்ணே
அதுவே நமக்குள் காதல்
என்று அர்த்தம் -காதல்
என்று ஆனபின்னே அது
வெற்றி அல்லவா இருவருக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-18, 12:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 51

மேலே