வா தமிழா வா

நீ புலி
என்பதை மறந்து...!
ஆட்டு மந்தைக்கு
அடிமையானாய்...!

உன் அடையாளம்
அழிக்கப்பட்டு...!
பூனையாக
வளர்க்கப்படுகிறாய்...!

வீரம் விளைந்த
உன் மண்ணில்...!
உன்னைக் கோழையாக
விதைக்கிறான்...!

போராட்டம்
உன் மரபணுவில்
உண்டு... அதிலே
வீரமும் உண்டு...!

மறதி தனிமனித
வியாதி அல்ல...!
அது தமிழனின்
வியாதி...!

இதை அறிந்த
உன் துரோகிகள்...!
உனக்குள் பல
வியாதிகளைப்
பரப்புகிறான்...!

உன் மூளையை
மழுங்கச் செய்து...!
உன் அறிவைமட்டும்
திருடுகிறான்...!

யாதும் ஊரே
என்கிறாய் நீ...!
ஏதும் உனதில்லை
என்கிறான் அவன்...!

கூடங்குளத்தில்
உன்னை கூட்டாக
அடித்தொழித்தான்
அடங்கிவிட்டாய்...!

உன் உறவுகளுக்கு
மீத்தேன் ஊட்டினான்...!
நீ வாயை மூடிக்கொண்டு
நமக்கென்ன என்று ஓடினாய்...!

நீயுட்ரினோ, ஸ்டெர்லைட்
எத்தனை... எத்தனை...
போராட்டங்கள்...!
அத்தனையிலும்
ஏமாற்றங்கள்...!

விழித்துக்கொள்
எம் இனமே...!
அழுது அழுது
உன் கண்ணீரில்
நீயே மூழ்கியது
போதும்...!

எதிர்த்து நில்
உன் நெஞ்சைப்
பிளந்திடு... வழியும்
இரத்தத்தில் அவன்
மூழ்கிச் சாகட்டும்...!

பிழைப்புவாத அரசியல்...!
போலியான நிர்வாகம்...!
கர்வம் கொண்ட காவல்துறை...!
வேடிக்கை பார்க்கும் சட்டத்துறை...!

இதுவே இன்றைய தேசிய நிலை
இவர்களிடமா உன் அறப்
போராட்டம்....? இல்லை
நம் வீரம் அறியாமல் நம்மை
சுட்டுவீழ்த்துகிறான்...!

பெண் என்றும் பாராமல்
கொடிய தோட்டாக்களை
துளைக்கிறான்..... இருக்கட்டும்
நம் இனப் போர்க்களத்தில்
பெண் ஏது? ஆண் ஏது?
அனைவரும் போராளிகளே...!

எதிரிகளே இது
வள்ளுவனை மட்டும்
தந்த இனமல்ல...!
வன்னிக் காட்டில்
தமிழ் வல்லவனைத்
தந்த இனம் மறவாதே...!

திருக்குறள் தந்த
இனம் உன்
குரல்வலை
நசுக்கிடுவோம்
மறவாதே...!

கத்திக் கத்திக்
களைப்புற்ற எம்
இனத்தை கத்தி
பிடிக்க வைக்காதே...!

தூண்டில் போட்டு
எம் தொண்டை
இறுக்கி எமை துப்பாக்கி
ஏந்த வைக்காதே...!

புறநானூறு தந்த
இனம் ஒருபோதும்
புறம் காட்டி
ஓடமாட்டோம்...!

எச்சரிக்கிறோம்...
அண்டி வந்தால்
அடைக்கலம்
எதிர்த்து நின்றால்
போர்க்களம்...!

நாங்கள் வீழ்ந்தாலும்
விதையாய் எம் மண்ணில்
தான் வீழ்வோம்
வீரமாய் முளைப்போம்
மறவாதே எம் துரோகமே...!

..... ரா.உமா சங்கர்.....

எழுதியவர் : உமாசங்கர். ரா (23-May-18, 1:28 pm)
Tanglish : vaa thamila vaa
பார்வை : 228

மேலே