பழக்கம்

தான் செய்யும் தவறுகளை
தன் ஆணவத்தால்,
தோள் தட்டி
பெருமை கொள்ளும்
வசைப்பாங்குடையவர்
மத்தியில் வாழ்வது கடிது..
இளந்தளிரை,
மாமிச பிராணி
மென்று விழுங்குவது
புதிதல்ல..
பொறுத்துக் கொண்டால்
காயங்கள் தான் மிஞ்சும்,
எதையும் உள்வாங்காமல்
எதார்த்தமாக எதிர்பார்பின்றி
வாழ பழகுவோம்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (23-May-18, 2:10 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : pazhakkam
பார்வை : 54

மேலே