ஸ்டெர்லைட் துயரம்
ஸ்டெர்லைட் துயரம்*
நஞ்ச வீசுறான்னு,
காற்ற நாசம் பன்னுறான்னு,
உடலை உருக்குறான்னு,
கருவ அழிக்கிறான்னு,
உரிமைய கேட்டோமையா,
ஒற்றுமையா நின்னோமையா,
ஒட்டு கேட்டு வந்தீங்களே,
உறுதி மொழி தந்தீங்களே,
கோட்டையிலே ஏத்தி விட்டோம்,
கோவணம் தான் மிச்சமையா,
நெஞ்சி வலிக்குதைய்யா,
நினைச்சு பார்த்தாலே,
உள்ளம் உருகுதைய்யா,
உசுரு போகுதைய்யா,
ஊர்பய சம்பாதிக்க,
உழைக்கும் மக்களை
கொன்னுட்டையே,
கொக்கும் இல்லை,
குருவியும் இல்லை,
குப்பையில தூக்கி போட,
வேலியே பயிர மேஞ்சதைய்யா,
பலி பாவம் சேர்த்ததைய்யா,
கங்கைக்கு போனாலும்,
காசில மூழ்கினாலும்,
உங்க பாவம் போகதைய்யா.
ஆனாலும்.....
வெட்ட வெட்ட துளிர்வோமைய்யா,
வீரு கொண்டு எழுவோமைய்யா,
தியாகிகளே....
நிம்மதியா தூங்குங்களேன்,
நாங்க இன்னும் சாகலயே...