நினைவுக்கும் கண்கள் உண்டு

பூட்டை சாவி கொண்டும் திறந்திடலாம்
உடைத்து நொறுக்கியும் திறந்திடலாம்
சாவியாலோ திறக்கலாம் பூட்டலாம்
உடைத்து நொறுங்கி திறந்ததை
அடித்து நொறுக்கி பூட்டிட முடியாது
அன்பு பாசம் நேசம் நட்பு காதல்
இன்னு மென்னென்னவோ அதுவும் அப்படி பட்டவையானது தான் மேலும்
வெட்டுப் பட்ட காயம் வடுவாகிறது
கண்ணில் படுகிற போதிலெல்லாம்
நிகிழ்வுகள் நினைவுக்கு வருகிறது
அப்போதோ நெஞ்சிலோர் நெகிழ்வு
ஞாபகச் சின்னமாகி விடும் சுடு
சொல்லுக்கும் வடுக்கள் உண்டு
கண்ணுக்கு தெரியாத வடுவாகும்
நினைவுகளுக்கு கண்களுண்டு அக்கண்களே ஞாபகச் சின்னம்
காரணமானோரை காணும் போது
நினைவுகளில் நெகிழ்வுகள் சில
நேரங்களில் பழிதீர்க்க துடிக்கும் சில
நேரங்களில் பலமிழந்து வடிக்கும் சில
நேரங்களில் ஜாக்கிறதையாகிடும் சில
நேரங்களில் மன்னித்து மனதுயரும்
°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
( கண்டம்பாக்கத்தான்)