எழுதும் ஊமை

அறிய முடியா சோகம் ஒன்று
மனதை தழுவி கொண்டதேனோ

வாழ்க்கை பாதை இங்கே
தடம் புறளுவதாளோ

மறக்க ஏனோ மனம் மறுக்கிறதே
நினைத்து நினைத்து அழுகிறதே

வாழ்க்கையில் இது திருப்பமா
இல்லை பாதையின் திடீர் முடிவா

நிலையை அறிந்தால் நிம்மதியா
இல்லை இறுதி நிலையிலும் துன்பமா

வாழ்வில் ஏனோ துயரங்கள்
இந்த வலியில் தானே வார்த்தைகள்

எழுதும் ஊமையாய் இங்கே நான்
இதை படித்தும் செவிடனாய் அங்கே நீ

எழுதியவர் : எழில் (23-May-18, 9:28 pm)
சேர்த்தது : எழில்
Tanglish : ezhuthum uumai
பார்வை : 586

மேலே