மேலிடத்து உத்தரவு
கூறியபடியே
கூட்டம் கூடிவிட்டது.
கலைக்கவா? தடுக்கவா?
கைது செய்யவா?
இப்போதைக்கு
எதுவும் வேண்டாம்
கடைசிவரை விடு
துப்பாக்கியை எடு,
கண்டபடி சுடு.
அதற்குமுன்
அவசியமாக, எப்போதும்போல்
ஆட்களைத் தயார் செய்து
கற்களை வீசச் சொல்.
அப்போதுதான்
கல் வீசினார்கள்,
கலவரம் செய்தார்கள்;
கலவரத்தை அடக்கினோம்
என்று சொல்லலாம்.
இனி, எவனும்
போராட வரக்கூடாது.
முன்னணியில் நிற்பவர்களைக்
கடத்தி, அடைத்து, அடித்து
காலி செய்.
என்னையா எதிர்க்கிறார்கள்,
சுண்டைக் காய்கள்.
ஓட்டுக் குத்தியவர்களை
ஓங்கிக் குத்து.