காலி செய்
உனக்கு வாக்களித்தோம்.
உயர்ந்த பதவிக்கு வந்தபோது
உற்சாகமானோம்.
வாழ்க போட்ட
வாயிலேயே சுட்டாயே.
எவனோ ஒரே ஒருவன்
எங்கள் காற்றைக் கெடுத்தான்,
நீரைக் கெடுத்தான்.
அவனை இடத்தைக்
காலி செய் என்றோம்.
நீ அவனுக்கு
வக்காலத்து வாங்கினாய்.
வாங்கியதை வாங்கிக்கொண்டு
எங்கள் உயிரைக்
காலி செய்கிறாய்.