குத்து மதிப்பு
குத்து மதிப்பாக
உன் மதிப்பு
‘குத்து மதிப்பு’ தான்.
கொன்ற பாவமும்
‘தின்ற பாவமும்’
நின்ற பாவம்.
செத்த, மதிப்பான உயிர்களை
திரும்பப் பெற முடியுமா?
வெத்து மதிப்பில்
வீறாப்பில்
உயிர்வதை செய்யும்
நாட்டு விலங்கே
நீ தரையில் நிற்பதாய்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
அதல பாதாளத்தில்
மூளை சிதறிக்கிடக்கிறாய்
முதலாளியே...