எலும்பு கூடாய் தேயும் வரை
களமிறங்கி அடிப்போம்
களமிறங்கி அடிப்போம் 💪💪💪💪💪💪💪💪
தூப்பாக்கி ஏந்திய
தூரோகி அரசை
துரத்தி அடிப்போம்
அப்பாவி மக்கள்
மீது தன் வீரத்தை காட்டிய கோழை
அரசை விரட்டி அடிப்போம்........
அன்று சுதந்திரத்திற்க்காக
சுட்டுக் கொல்லப்பட்டோம்
இன்று
சுகாதாரத்திர்க்காக
சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
*ஆனால்*
அன்றோ அயல் நாட்டினரிடம்
இன்றோ தாய் நாட்டினரிடம்........
சட்டத்தை கையில்
எடுக்க கூடாதென
கூறும் சட்டமே
இன்று துப்பாக்கியை
கையில் எடுத்துக் கொண்டது
ஈவுஇரக்கமின்றி
தன் இனத்தையே
சுட்டுக் கொன்றது......
காவல் துறையே!
13 உயிர்களை காவு
வாங்கிய துறையே!!
அதிகரித்துவிட்டது
உங்களுக்கு
அதிகார திமிரு
அதனால் வந்ததோ
இந்த துணிவு
இது யார் எடுத்த முடிவு
உங்களால் பல
உயிர்களுக்கும் உடல்களுக்கும் இடையே
உண்டானது பிளவு
எங்கள் உரிமை போனது களவு
பறிக்கப் பட்டது
எங்கள் கனவு
நஞ்சாய் போனது
நாங்கள்
உண்ணும் உணவு
பஞ்சாய் போனது
எங்கள் நெஞ்சம் அதை
தீ வைத்து பற்ற வைத்து விட்டது அரசாங்கம்....
கண்ணீர் கடலில்
ஊருசனம்
நீங்கள் ஆட்சி நடந்தி என்ன பிரயோஜனம்
உங்கள் நினைவிற்க்கு வரவில்லையா
உங்களின் பதவியேற்ப்பு பிரகடனம்.......
முத்தெடுக்கும் தூத்துக்குடியில்
இன்று பிணவாடை வீசுகிறது
ஆங்காங்கே
தமிழன் செத்துக் கிடப்பதை பார்க்கும் போது அங்கமெல்லாம் வெந்து போகிறது.......
பித்து பிடித்தாடும் அரசே!
அகிம்சை வழியில்
போராடியவர்களை
அநியாயமாக
கொன்று குவித்ததில்
உங்களுக்கென்ன லாபம்....
போலீஸ் பருந்துகளே
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்
இம்மாத சம்பள கவரை நீங்கள் வாங்கும் போது
பல அப்பாவி மக்களின் கண்ணீர் துளிகளையும் கிம்பளமாக வாங்கிச் செல்வீர்கள் ........
அப்போதாவது உங்கள் சட்டை பாக்கிட்டுகள்
நிறம்புமா?
தெரியவில்லை..........
நீங்கள் இணையதள. சேவையை தடுத்து நிறுத்தலாம்
ஆனால்
அடிப்படை உரிமைக்காக போராடும் தழிழர்களின்
இதயங்கள் இணைவதை
உங்களால் ஒருபோதும்
தடுத்து நிறுத்த முடியாது.............
புத்தி கெட்ட அரசே!
நீங்கள் ஸ்டெர்லைட்டை காக்கிறேன் என்று
ஒட்டு மொத்த தமிழகத்தையும்
கை கழுவியது ஏனோ??
காரணம்!
ஸ்டெர்லைட் காரனிடம்
கை நீட்டி விட்டது தானோ???
தமிழனுக்கு போராட்டமும்
போர்க்களமும்
புதிதுமல்ல.....
பயமுமல்ல........
இங்குள்ள தமிழனுக்கு
தவறு நடந்தால் எங்குமுள்ள தமிழனும் போராட்டப் பதாகையை கையில் ஏந்துவான்....!!
நாங்கள்
விழித்துக் கொண்டோம்....!!!
இனி நீங்கள் எங்கள் மீது துப்பாக்கி தொட்டா பாய்ச்சினாலும் சரி
பீரங்கி குண்டு வீசினாலும் சரி
ஒரு போதும் பின் வாங்க மாட்டோம்
(குறிப்பாக)
துரோகியானாலும் சரி அவனின் புற முதுகில் குத்த மாட்டோம்.......
தமிழன் வாழ்ந்தாலும் சரி வீழ்ந்தாலும் சரி
அநிதிக்கு ஒருபோதும்
துணை போக மாட்டான்.......!!!
நாங்கள் துடிதுடிக்க
கொல்லப்பட்டாலும் சரி தூக்கிலிடப்பட்டாலும் சரி தூத்துக்குடியை மீட்டேடுக்காமல் எங்கள் நிழல் கூட இளைபாதடா........!!!!
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
எலும்புக்கூடாய் தேயும் வரை ஒன்று கூடிப் போராடுவோம்.....!!!!
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
இப்படிக்கு
- கவிமலர் யோகேஸ்வரி💪💪💪