தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

யார் இட்ட சாபம்!

கவிஞர் இரா. இரவி

யார் இட்ட சாபமும் இல்லை காரணம்
யாம் தமிழர் என்ற ஒற்றுமை இன்மையே!



இலங்கையில் தமிழர்களை கூண்டோடு அன்று
இன அழிப்பு செய்தனர் இரக்கமின்றி!



கர்னாடகத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அன்று
கன்னடர் தாக்கினர் தமிழ் மக்களை!



ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியென
உலகிற்கு இளைத்தவன் தமிழ் என்று ஆனான்!



சாதியின் பெயரால் பிரிந்து விட்டான்
மதத்தின் பெயரால் பிரிந்து விட்டான் !



கட்சியின் பெயரால் பிரிந்து விட்டான்
கொள்கையின் பெயரால் பிரிந்து விட்டான் !



தன்முனைப்பின் காரணமாக பிரிந்து விட்டான்
தான் என்ற அகந்தையால் பிரிந்து விட்டான் !



சாபமோ பாவமோ அல்ல காரணம்
சகோதர்களாகச் சங்கமிக்காததே காரணம் !



கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை
கட்டாயம் உணர வேண்டும் தமிழர்கள் !



சாதி மதம் கட்சி கடந்து அனைவரும்
சகோதரர்களாக தமிழர்களாக ஒன்றுபடுவோம்!



தமிழனுக்கு ஒரு துன்பம் என்றால் உடன்
தட்டிக்கேட்க அனைவரும் ஒன்றுபடுவோம்!



தமிழனுக்கென்று தனி குணம் என்பதை மாற்றி
தமிழனுக்கென்றும் சிறந்த குணம் என்று உணர்த்திடுவோம் !



உலகின் மூத்த மொழி தமிழ் மொழி நம் தாய்மொழி
ஒருங்கிணைவோம் அனைவரும் தமிழர்களாக!



இங்குள்ள தமிழர் ஒன்றாக வேண்டும் உடனே
அன்று புரட்சிக்கவிஞர் பாடியது நடந்தாக வேண்டும்!



சண்டையிட்டு அல்லல் பட்டதெல்லாம் போதும்
சகல தமிழரும் ஓரணியில் திரண்டு காட்டுவோம்!



சாபத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவே
சாபவிமோசனத்திலும் நம்பிக்கை இல்லை இணைவோம் நாம்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (20-May-18, 12:31 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 82

மேலே