காத்திருக்கிறேன்

மழை தூவ காத்திருக்கும் கருமேகமாய்…
அதிகாலை வேளையை எதிர் நோக்கிக் காத்திருக்கும் சிறு மொட்டாய்…
அழகிய கலையாய் மாற சிற்பியின் உளிக்காக காத்திருக்கும் கருங்கல்லாய்…
ஆர்ப்பரித்து கரை தொட காற்றுக்காக காத்திருக்கும் கடலாய்….
உன் வருகைக்காக காத்திருக்கிறேன் கவிஞனாய் மாறி நான்!!