சொல்ல மறந்த அன்பு

வண்ணம் தொடாத தூரிகையால்
ஓவியம் வரையும்
விரல்களின் ஆசை
என்னவென்று சொல்லமுடியும்
மூடிய விழிகளால்

கனவில் வரும்
பறவையின் சிறகசைந்த பாதையை
குறித்துவைக்க
ஆதாரமிருக்கிறதா
வானத்தில்

நிரந்தர மேகத்தின் பின்னால்
ஒளிந்துகொண்டு
கண்சிமிட்டும் வீண்மீனை
எப்படி அறிமுகப்படுத்துவது


உள்ளுக்குள் புன்னகைத்து
வெளியில் இறுகிக் கிடக்கும்
பூவின் வாசனை
ஒளிந்துகொண்டிருக்கிறது
ஒரு புதையலைப் போல

விழியோரம்
துளிர்க்கும் துளியில்
மெல்ல மின்னுகிறது
சொல்ல மறந்த
ஓர் அன்பு !

எழுதியவர் : Mathibalan (25-May-18, 8:20 pm)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : solla MARANTHA anbu
பார்வை : 240

மேலே