கனவொன்று கண்டேன்

கனவொன்று கண்டேன்.
இரத்தக் காட்டேரிகள் மனிதவடிவில் உயிர்த்தெழக் கண்டேன்.
" எங்களைக் காப்பாற்றுங்கள், ",என்றே ஆடுமாடு பன்றிகளோடு கோழிகளெல்லாம் என் வீட்டு வாசல் வரக் கண்டேன்.
வேட்டையாடும் மனித இரத்தக் காட்டேரிகள் சுற்றி சூழ்ந்திடக் கண்டேன்.
அவற்றின் தோற்றம் எனக்கு வேண்டியவர்களாக காட்சியளிக்க கண்டேன்.

இரத்தக் காட்டேரிகளை அழிப்பதா?
ஆடுமாடு பன்றிகளோடு கோழிகளையும் பலியிட்டு உண்டு நானும் ஒரு இரத்தக்காட்டேரி என்று பிரகடனம் செய்வதா?

இயற்கை தானே முடிவெடுக்கக் கண்டேன்.
எங்கும் வெள்ளப்பெருக்கு என்பதை விட எல்லைமீறிய இடங்களிலெல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கண்டேன்.
அழிவு கண்டு ஆனந்தம் கொள்ள என்னுள் இருக்கும் அரக்கன் விழித்திருந்த நேரம் வயிற்றில் பசியுணர்வு மேலோங்க ஆடுகளின் கழுத்தை கடித்து இரத்தம் குடிக்க தொடங்கிவிட்டேன்.
நல்லவை எல்லாம் பயந்தோட, அல்லவை எல்லாம் வெள்ளத்தில் அடித்தோட,
பூமி பிளந்து பிளவுக்கும் அகப்பட்டு புவிமையம் நோக்கி பயணமானேன்.
துரத்தில் சிவப்பு மஞ்சள் கலவையில் தங்கம் மின்னிய நெருப்புப் பிழம்பை நெருங்கிக் கொண்டிருந்தேன்.
உடல் சூடு தாங்காமல் கண்களை விழித்துப் பார்த்தேன்.
அதிகாலை சூரியன் பல்லிளித்தான்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-May-18, 7:09 pm)
பார்வை : 427

மேலே