ஞானம் பிறக்கும்

கூட்டத்தில் விழா மேடையில் கவிதை வாசிப்பது குறித்து எல்லாரும் கதையளக்கையில் நான் மட்டும் புத்தனை நினைந்து அவனது கொள்கைகளை நினைந்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன்.
எல்லாரும் முட்டாள் என்றார்கள்.
வீணன் என்றார்கள்.

புசிக்கும் வகைவகையான உணவுகளால் தான் பசிமறைகிறது என்றால் மனிதர்களில் பெரும்பாலானோர் சுடுகாட்டு தீயில் வெந்து அவிந்து போயிருப்பார்.

எதை எல்லாம் சாப்பிடப்போகிறாய் என்று அடுக்கி திரிவதைவிட இதை சாப்பிட்டால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே உங்கள் மூடத்தனம்.

வயிற்றில் எரியும் தீ சாம்பலாகும் உணவில் சத்து உள்ளதா என்பதை அறியாமல் வாய்க்கு ருசி தேடும் ஆடம்பர சுகவாசிகளாய் வாழும் உங்களிடம் பேசி என் பொறுமை இழக்க நான் தயாராக இல்லை.

ஈட்டிகளாய் குத்தும் வார்த்தைகளைவிட மௌனமென்ற அணு ஆற்றலை அகிலம் நோக்கி ஏவிவிட்டு பொறுமையாய் நல்ல பலனகளைக் காண காத்திருக்கிறேன்.

நெஞ்சகத்துள்ளே இறையின் காட்சியே தோன்ற எல்லாமும் உணர்த்த பரம்பொருளின் ஒவ்வொரு அடியும் கணிக்க முடியாதது.
காலங்களால் அழிவில்லாதது.
தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அதிகாலைச் சூரியனை
முழுநம்பிகையோடு ஆரதனை செய்தால் ஞானம் பிறக்கும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-May-18, 7:51 pm)
Tanglish : nanam pirakkum
பார்வை : 1566

மேலே