இப்படியும் ஒரு மனிதன்
ஏமாறுவதற்கு பிடித்திருக்கிறக்கிறது.
நான் முட்டாளல்ல...
மன்னிப்பு கேட்க
பிடித்திருக்கிறது
நான் குற்றவாளி அல்ல
அடிமையாக
பிடித்திருக்கிறது
நான் கைதியல்ல
தோல்வியை
மிக அதிகம்
பிடித்திருக்கிறது.
நான் கோழையல்ல..
மரணத்தை
நிறைய
பிடித்திருக்கிறது
நான் கடவுளல்ல...
எனை பற்றிய
எந்த பின்குறிப்பும்
வேண்டாம்...
நான் வாழ பிறந்தவன்...
அதற்க்காக நான்
சுயநலவாதியல்ல ..