நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகத்தில்
மாணவிகள் பாடம் கற்றுக்கொள்கின்றனர்
குடும்பத்தில்
மனைவிகள் பாடம் கற்றுக்கொடுக்கின்றனர்
முகநூலைப் பார்க்கும் நாம்
அவர்களின் அகநூலைப் பார்ப்பதில்லை
முன்பெல்லாம்
முதியோர்கள் நம்
உள்ளத்தில் இருந்தார்கள்
இப்பொழுதோ
முதியோர் இல்லத்தில்
இதனால்தால்தான்
நம் சமுதாயம் பள்ளத்தில்
முன்பெல்லாம்
துணியை மட்டும் துவைத்து காயப்போட்டவர்கள்
இப்போது
துணைவனையும்
இப்போதெல்லாம்
மாமியார் மருமகள்
சண்டையே வருவதில்லை
ஏனென்றால்
மருமகள் இருக்கும்
தெருவிற்குக்கூட மாமியார் வருவதில்லை
முடிந்தவரைத் தவிருங்கள்
வழக்கை
அதுவே நல்ல வாழ்க்கை
முடிந்தவரை பெற்றவர்களுக்கு
குடு இன்பம்
அதுதான் குடும்பம்