மௌனம்

வலியது வலியது
எண்ணம்
எளியது எளியது
உள்ளம்
பொழியுது பொழியுது
மௌனம்
வழியுது வழியுது
கண்ணீர,
இல்லை இல்லை மௌனம்
இனியும் இல்லை மௌனம்

.துணியுது துணியுது
எண்ணம்
சிரிக்குது சிரிக்குது
உள்ளம்
பேசுது பேசுது
மௌனம்
கனியுது கனியுது
இனிமை
காண்பது காண்பது
மேன்மை
இல்லை இல்லை மௌனம்
இனியும் இல்லை மௌனம்

துணிந்திடு துணிந்திடு
வாழ்வில்
செயற்படு செயற்படு
ஆற்றல்
இல்லை இல்லை
தோல்வி
மேலும் மேலும்
மேன்மை
தொலைவில் தொலைவில்
துயரம்
இல்லை இல்லை மௌனம்
இனியும் இல்லை மௌனம்

எழுதியவர் : பாத்திமாமலர் (27-May-18, 11:51 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : mounam
பார்வை : 258

மேலே