கேட்டுப்பார்

சந்தன துகள்களை
உன் முகமெல்லாம்
அள்ளித்தெளித்த அந்த
மஞ்சள் வெய்யிலை
கேட்டுப்பார்

உன் முகத்தோடு
மோதி பூங்காற்றாய்
மாறிப்போன அந்த
இளங்காற்றை கேட்டுப்பார்

உன் மேனியில்
விழுந்து பன்னீர்
சொட்டுக்களாய் மாறிப்போன
அந்த மழைச்சொட்டுக்களை
கேட்டுப்பார்

உனக்காக
காத்திருந்து காத்திருந்து
காலங்களை இழந்து
தனிமரமாய் நிற்கும்
என் சோகக்கதையை சொல்லும்
அவைகள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (27-May-18, 6:31 pm)
Tanglish : kettuppaar
பார்வை : 325

மேலே