புதையல் 10
மூவரும் சிவலிங்கத்தை வணங்கி
தன் அடுத்த குறிப்பான மற்றொரு
மலையை தாண்ட புறப்பட்டனர்.
இந்த மலையில் மறுபக்கம் மலை வாசிக்கப் வசித்து வந்தனர்.அங்கு
அவர்களிடம் தாங்கள் குகையில் உள்ள கல்வெட்டை ஆராய்ச்சி
செய்ய வந்துள்ளோம்.
அங்கு இந்த மலையை கடப்பதற்கு
ஆபத்து ஒன்றும் இல்லை.
மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் குகை தெரியும் என விளக்கினர்.
மாலையில் மலையில் ஏற மலை வாசிகள் உதவினர்.மலையின் உச்சியில் ஏறிய மூவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.மலையின்
அடுத்த முனையில் பாலம் இருந்தாலும் பாதுகாப்பு அற்றது.
பாலம் கீழே ஆழமான கடல் பகுதி
பாலம் அருந்தாலும், தவறி விழுந்தாலும் ஆபத்து உயிர் போகும் அளவிற்கு அதிக ஆபத்து நிறைந்தது.
மூத்த சகோதரர் சொன்னார்.நாம்
சிவலிங்கத்தை மனதில் ஏற்று பயணிப்போம் என்றார்
அடுத்த இரண்டு சகோதரர்கள் தங்கள் அண்ணனை பின்பற்ற முடிவு செய்தனர்.
பிறகு ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து பாலத்தை கடக்க முடிவு செய்து முதலில் தன் கடைசி சகோதரனை அனுப்பினர்.முன் எச்சரிக்கையாய் அவர் இடுப்பில் கயிறு ஒன்றை கட்டி மறு முனையில்
இருவரும் பிடித்து கொள்ள மெது மெதுவாக பாலத்தை கடந்தான்.பின்
அவர் சென்றதும் அந்த முனை பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றை கட்டி பிடித்து கொள்ள இரண்டாவது
சகோதரர் பாலத்தை கடந்தார்.
அடுத்து தன் மூத்த சகோதரர் கடக்க
முயலும் போது பாலம் சற்று நகர
அங்கும் இங்கும் நகர்ந்தது.
இருந்தாலும் அவர் மெதுவாக மறுபக்கம் வந்தடைந்தார்..
ஒரு வழியாக இரு மலைகள் கடந்து
விட்டனர்.உயிர் பயத்தோடு பயணிக்கும் இந்த நிலை அடுத்த
சில நேரங்களில் முடிவடையும் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்து ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து மகிழ்ந்தனர்.
மலையின் உச்சியில் இருந்து பார்க்க
குகை அருகே இருப்பது போல் தெரிந்தாலும் பாலத்தை கடந்து வந்த பின் குகை மறைந்து போனது.
அவ்வளவு அடர்ந்த மரங்கள் நிறைந்த ஒரு பாதை அது மட்டுமல்ல
அங்கே வழி அறியாது சென்றால் அவ்வளவு தான்.ஒன்றும் புரியவில்லை என்ன செய்ய?
வழி அறிந்து பயணிப்பாரா?
மதி அறிந்து புதையலை அடைவாரா?
இல்லை பயம் அறிந்து பயணத்தை
விடுவாரா?
என்ன நடக்க போகிறது?????