உள்ளக் கொதிப்பு

கொலைவெறி கண்டு கொதித்துத் துடிக்கு(து)
உலைக்களம் போலெம துள்ளம் !- விலைபோன
இவ்வரசின் கேடுகெட்ட ஈனத் தனத்தினை
எவ்விதம் தாங்க இனி ?

மூச்சடக்கி முக்குளித்து முத்தெடுக்கும் நன்னகரின்
மூச்சை நிறுத்திட மும்முரமாய்க் - கூச்சமின்றிப்
பெற்றபொரு ளுக்காய்ப் பெரிதுழைப் போர்களைச்
சுற்றி வளைத்துச் சுடு.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-May-18, 1:12 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 147

மேலே