மனித நேயம் காணவில்லை

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .இப்போது வாட்ஸ்அப் எவ்வளவு வேகமாக நடக்கும் நிகழ்ச்சிகளை பகிருகிறது என்று அனைவருக்கும் தெரியும் .ஆனால் இந்த நிகழ்ச்சியை இல்லை இல்லை ஒரு கோரமான விபத்தை நின்று நிதானமாக படம் பிடித்து அதை அனைவருக்கும் பகிர்ந்து கொண்டது அதை விட கொடுமை .ஆம் ,சமயபுர மாரியம்மன் கோயிலில் உள்ள யானைக்கு மதம் பிடித்து அதனுடைய பாகனை மிதித்து கொன்றது அனைவருக்கும் தெரியும் .அது ஒரு துயரமான சம்பவமும் கூட .... அதை பார்த்த விதம்தான் மிக மிக அருவருக்க தக்கது .மனிதனாய் பிறந்த யாரும் ஒருவருக்கு ஒரு துன்பம் என்றால் அவரை அதில் இருந்து விடுவிக்கத்தான் நினைப்பார்கள் அல்லது அவருக்காக ஒரு பிரார்த்தனை செய்வார்கள் .இதுதான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு .ஆனால் இந்த விபத்து நடந்த இடத்தில இருந்த யாரோ ஒருவர் இதை நிதானமாக படம் பிடித்து இதை அனைவருக்கும் அனுப்பி இருக்கிறார் .சரி அவர்தான் அனுப்பினார் என்றால் அடுத்து அடுத்து அதை மற்றவர்களுக்கு அனுப்பியவர்களை என்ன சொல்வது ?இதில் நான் சொல்ல வருவது என்ன என்றால் ஏன் அவரை நம்மில் ஒருவரை நினைத்து நாம் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை ?அப்படி முடியாவிட்டாலும் அந்த இடத்தில நாம் அவருக்காக கடவுளிடம் ஒரு சிறு பிரார்த்தனை செய்து இருக்கலாம் .அவ்வளவு சக்தி வாய்ந்த இடத்தில நம் கூட்டு பிரார்த்தனையை கடவுள் ஏற்பார்.இதுவும் முடியவில்லை என்றால் அவருக்காக வருத்தப்பட்டு ஒரு துளி கண்ணீர் சிந்தலாம் .இது மட்டுமே ஒரு மனிதனாக நாம் செய்யும் காரியம் .ஆனால் இதை எதையும் செய்யமல் அதை படம் எடுத்தவர் கண்டிப்பாக மனித நேயம் இல்லாதவர் ஆகத்தான் இருப்பார்.இனி வரும் காலங்களில் ஆவது மனித நேயத்தோடு நடந்து கொள்வோம் .

எழுதியவர் : உமாபாபுஜி (28-May-18, 7:21 pm)
சேர்த்தது : umababuji
பார்வை : 203

சிறந்த கட்டுரைகள்

மேலே