பண்ணோடு பிறந்தது தாளம்

விடிவெள்ளி (1960) திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் இயற்றி, ஏ.எம்.ராஜா இசையமைப்பில் ஜிக்கி, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட நடிகர் பாலாஜி, M.N.ராஜம் நடித்த பாடல்,

பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி (கண்ணோடு)

மண்ணோடு மலர்ந்தது மானம் குல
மகள் கொண்ட சீதனம் யாவும்

(பண்ணோடு பிறந்தது)

செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
சொல்வோம் என்றே உள்ளம் ஓடும் வார்த்தை
சொல்லாமலே இதழ் மூடும்


ம்ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் ம்ம் ம்ஹ்ம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு
பழகாத கல்விக்குத் தானிந்தப் பள்ளி

காணாத கதை இங்கு காண்போம் அதைக்
கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இங்கு காண்போம்

காட்சிகள் யாவும் இனிமையாகவும், நளினமாகவும் இருந்தன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-May-18, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 133

மேலே