ஓர் உயிரின் ஓசை

அழகான கள்வனுக்கு ஒரு கவிதை!!!
என் ஆசை காதலனுக்கு ஒரு கடிதம்!!!

உன் உயிரானவள்
உனக்காக எழுதும்
ஓர் உயிரின் ஓசை!!!

அன்று என் காதலை ஏற்றுக்கொள்
என்று என் பின்னால் சுத்தி திரிந்த
மனதிற்கு இன்று என்னை ஏனோ
கண்டுகொள்ள கூட நேரமில்லை..

அன்று ஆயுள் முழுவதும்
உன் அணைப்பிலே இருக்க வேண்டும் என்று சொன்ன
ஒரு இதயம் இன்று
என் தேகம் தொட கூட தயங்குகிறது..

அன்று என்னை தூங்க விடாத
உன் பேச்சுக்கள்
இன்றும் தொடர்கிறது அன்பே...
ஆம் அன்று காதலால் இன்று காயத்தால்!

அன்று உனக்காக என் உயிரையும்
கொடுப்பேன் என்று சொன்னவன்...
இன்று ஏன் இப்படி
என் உயிரை எடுக்கிறாய் என்கிறான்
காலம் கடந்தது காதலும் மடிந்தது...!

அன்று நீதான் என் உலகமென்று
சொன்ன இதழ்கள் இன்று
என்னை உதாசீனப்படுத்துகிறது..

உன்னை பார்த்து ரசித்த
என் கண்களில்
காதல் வெள்ளம் ஓடுவது
உனக்கு தெரியவில்லையா!!!
என் கண்ணீரின் வலிகள்
உனக்கு புரியவில்லையா!!!

என் மனமார்ந்த மணவாளனே!!!

உன்னால் தனிமை கூட எனக்கு தோழி ஆகிவிட்டால்..

என் காவியத்தலைவனே!!!

கண்களில் உன்னை சுமப்பவள் நான்!!!
எனக்குள் உன்னை ஊற்றியவள் தான்!!!
உனக்கு மற்றொரு தாய் நான்!!!
இனி நீதான் என் வாழ்க்கை
என்று நினைத்தவள் தான்!!!

இமைகள் மூட மறக்குது...!
இதயம் துடிக்க மறுக்குது...!

என் கரம் பிடித்த கண்னாளனே!!

காதல் கசந்து விட்டதோ..?
பாசம் பறந்து விட்டதோ..?
என்னை மறந்து விட்டதோ..?

உன் நினைவுகளால் என் மனம்
மெழுகுவர்த்தி போல்
உருகி கொண்டிருக்கிறது!!!!
உன் பிரிவால்
என் உயிர் வடிந்து கொண்டிருக்கிறது!!!!

என்னுயிர் காப்பாயா..?
என்னை ஏற்றுக்கொள்வாயா..?
மீண்டும் ஒரு காதல் செய்வாயா..?
என்னை கட்டியணைப்பாயா..?
உன் முத்தங்களால் மூழ்கடிப்பாயா..?

என் உயிரின் வரிகள்
உன் மனதை
மாற்றும் என்ற நம்பிக்கையில்
உன் காதல் மனைவி!!!!

கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (28-May-18, 8:24 pm)
Tanglish : or uyeerin oosai
பார்வை : 1987

மேலே