இடைவெளி
மிக கடுமையான
வலிகளில் ஒன்று
இடைவெளி...
பத்து நாட்கள்..
பத்து யுகங்களாக மாறின...
உன்னோடு
பேசாமலும் பார்க்காமலும்
இருந்த பொழுது..
என்னை நினைத்த
நிமிடங்களை விட
உன்னை நினைத்ததே
நாட்கள் நகர்ந்தன..
உன் அழைப்பிற்காகவும்
உன் குறுஞ்செய்திக்காகவும்
அலைபேசியை பார்த்தபடியே
நாட்கள் ஓடின..
உன் அழைப்பும்
குறுஞ்செய்தியும் என்று
ஏங்கிய நிமிடங்கள்
அதிகம்..
உன் புகைப்படத்தை
பார்த்து தேர்த்திக்கொள்ள
முயற்சித்தன்...
ஆனால்..
அதில் ஏமாற்றமே..
வலிகள் கூடின
உன்னை பார்க்க
வேண்டுமென..
உன் வேலைகளில்
நீ நேரத்தை கழித்து
கொண்டிருப்பாய் என்று
யோசிக்க தெரிந்த எனக்கு..
ஏற்று கொள்ள முடியாமல்
போகிறது...
இடைவெளி
அகன்று பேச ஆரம்பித்த கணம்..
உன்னை பார்த்து
அணைத்து கொண்டு
முத்தமிட
ஆசைப்பட்டது மனம்..
மனதின் இடைவெளி
குறைந்தது
உன் குரலை கேட்க
ஆரம்பித்த பொழுது...