காதல்
வெண்பாவால் தொடுத்த பாமாலையால்
மன்னன்புகழ்ப் பாடி பெற்றனர் சன்மானம்
புலவர்கள் அக்காலத்தில், பெண்ணே உனக்கும்
பாமாலையால் பாடிடவா பாடினால் என்ன
தந்திடுவாய்ப் பெண்ணே, என்றேன் அதற்கவள்
பாவெல்லாம் படித்திட நேரமேது எனக்கு
சிக்கென ஒரு வார்த்தையால் என்னை நீ பாட
நீ வேண்டுவதை தந்திடுவேன் நான் என்றாள்
இதோ, என்றேன், பெண்ணே 'நீ பேரழகி' என்று
நான் கூறி முடிக்கும் முன் விழுந்தது என்
கன்னத்தில் முத்தமிரண்டு அவள் எனக்களித்த
சன்மானம், என் காதல் விண்ணப்பத்திற்கு
அவள் தந்த சம்மதம்