சந்திரனா என் சந்திரனா

நிலவே...!!!
உன் சில்லென்ற காற்று என்னை சிலிர்க்க வைத்தாலும்,
அவன் உடல் சூடு போன்ற கதகதப்பை உன்னால் தர இயலாது...

உன் பேரொளி என்னை சுண்டி இழுத்தாலும்... அவன் அழகிய கண்களின் காந்தசக்திக்குள் வழியரியமல் மீண்டும் சிக்கிவிடுவேன்...

உன் வெண்மேனி என்னை பேதலிக்க வைத்தாலும்,
அவன் மாநிற மேனியும் செதுக்கிய உடலும் தசைகளும் கொண்ட அலாதி அழகை உன்னால் பெற இயலாது...

எனவே மாதம் ஒருமுறை பௌர்ணமிபோல் வருவது வீண்...
எனக்கென விண்மீனாக வந்து அவனிடம் என்னை சேர் அவனவளாக....

எழுதியவர் : மஹி (30-May-18, 9:49 pm)
சேர்த்தது : மஹி கணேஷ்
பார்வை : 91

மேலே