ஒரு காதல் கடிதம்

உன் கனவிலே நுழைந்து,
பல நினைவுகளும் கொடுத்து,
உன் மனதையும் கெடுத்தேன்...
ஒரு காதல் கவிதை எழுத....!!!

உன் மீதுள்ள ஆசைகளை வார்தைகளாய் கோர்த்து, வர்ணங்களாய் தொடுத்தேன் இவ்வாறாக...

"உன் கருவிழியிலே விழுந்து,
உன் மூக்கினிலே சறுக்கி,
உன் உதட்டிலே கால் பதித்தேன்...
உன் உதடெச்சிலை சுவைத்து பார்க்க..."

நீ உறங்கினாலும் என் காதலை ஏற்று உதட்டோரமாய் ஒரு புன்னகை பூப்பாயா என ஆவலாய் பார்க்கிறேன் உனதுதட்டை..
அடி சண்டாளி.....
என்னே... உன் உதட்டின் அழகு...
அதை மெலிதாய் கடிக்கும் உன் முத்துக்கள்....
உறங்கினாலும் சிரித்துக்கொண்டு என்னை காதலிக்கிறாயே கள்ளி....!!!

எழுதியவர் : மஹி (30-May-18, 9:39 pm)
சேர்த்தது : மஹி கணேஷ்
பார்வை : 271

மேலே