தாவணி தேவதை
அன்பே
வருடங்களில் உன்னை பிரிந்து சென்று
வருத்தங்களில் நான் வெந்து
பலநாள் கனவாக
காண வந்தவன் -- கண்ட பிறகு
கண்களால் கண்டு தவித்தேன்!
அறியாத பருவத்தில்
ஆசை மாமனென்று பின்னால்
சுற்றியவளே --- இனி
பருவத்தினை அறிந்து
என்னை உன் பின்னால்
சுற்றவைப்பாயா????
பாவாடை மொட்டு ஒன்று
தாவணி மலராக நின்று
மனதை கொள்ளை கொள்ள
கற்றுக் கொண்டாயோ???
மொட்டு மலர்ந்த ஓசையை
மாமன் காதுகளுக்கு
கேட்காமல் போய்விட்டதே.......
கரிசல் காடுகளில்
கைபிடித்து நடைபோட்டு வந்தவள்
இடை தெரிய இடமில்லாமல்!
வண்ண தாவணியில்
மயக்கும் மாராப்பில்
வாலிபத்தினை தீ மூட்டுகிறாய்!!
எப்போதும் உன்னை விருப்பி பார்ப்பவன்
இன்று
திரும்பி பார்க்காமல் போவேனா?.....
பனிகட்டி பருவத்தினை
பார்வைகளின் சூட்டால்
உருக வைக்க வந்தவனை
உற்றுப் பார்க்காமல் போகாதே -- மறையாத
என் உருவம் தனிமை
நினைவுகளில் உன்னோடு உறவாடும்
இளமையின் இம்சையாக
இன்னல் படுவாய்!!
பிரிந்து சென்றதால்
கோபம் கொண்டவளே
நான் தனித்து நின்ற
சோகங்களை கேட்டால்
தானக மோகம் கொள்வாயா????
இல்லை
"முட்டைக் கண் விழியால்
ஊடல் கொள்வாயா????
எதை கொண்டாலும்
என்னை விட்டு எங்கே செல்வாய்???...
ஆவணி வரும் வரை
தாவணியும் சுமைதான்....
ஆட்கள் வரும் வரை
தனிமையும் கொடுமைதான்....
ஆசை மாமன் என்னை பிரிந்து
தனிமையில் வாடும்
தாவணி தேவதையே
தேடி வந்து என்னை அடைந்தால்
கூடல் கொண்டு
நாம் கூடி வாழலாம்...!!!