எவ்வாறு சொல்வேன்
உன்னைக் காண
உங்கள் தெருவிற்கு வந்து
காத்திருக்கும் போதெல்லாம்
எங்கள் வீடும் இந்த தெருவில்
இருந்திருக்கக்கூடாதா யென
நினைக்கத் தோன்றும்!
இந்த தெருவாய்
இருந்திருந்தால்
எதிர் வீடாய் இருக்க வேண்டும்
என்று தோன்றக்கூடும்போலும்!
நேற்று மட்டுமல்ல
அதற்கு முன்னரும் நிலா
வானில் உலவியது!
இன்றுதான் என் இதய
சாளரத்திற்குள் நுழைந்தது!
நேற்று மட்டுமல்ல
அதற்கு முன்னரும் மழை
பெய்யத்தான் செய்தது!
இன்றுதான் கதவின் வழியே
வீட்டிற்குள் நுழைந்தது!
நான் மட்டுமல்ல
எங்கள் வீடும் இந்த
காதல் மழையில்!
மூச்சிரைக்க உங்கள் தெருவில்
ஓடி வந்த என்னை
பார்த்தவர்கள்
ஏன் இவ்வளவு வேகமாய்
ஓடுகிறாய்?என்று கேட்கிறார்கள்
எங்கள் தெருவில் தோன்றிய
வானவில்லை வளைத்துத்தான்
உனக்கு காதல் அம்பை
எய்தியபின் அதைக்காண
ஓடிவந்தேன் என எவ்வாறு
சொல்வேன்
அவர்களுக்கு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
