வாழ்க்கை யெனும் போர்க்களம்

ஒன்றும் இல்லை என பொய்
சொல் வதற்கில்லை எனினும்
கடவுள் கொடுத்த கால் வயிறு
கஞ்சோ கூழோ நிம்மதியாய்
குடிக்க சஞ்சலமிலா மனமில்லை
கண்களை மூடினால் திறந்தால்
பிள்ளைகள் சிந்தனையே பெரிது
வாழ்க்கையெனும் போர்க்களம்
வாய் பிளந்த திமிங்கிலம் போல;
பெண்ணாக பிறந்தவள் சமைஞ்சி
நின்று பெற்றோரின் முகத்தை
பரிதாபமாக பார்க்கிற போது
மடியில் நெருப்பை க்கட்டிக்
கோண்டபடி எப்போது கனிந்து
எரிந்து சாம்பலாகிவிடுமோ;
நாம் தலைகுனிய வாகிவிடுமோ
மிச்சம் இருப்பது அந்த அச்சமே;
பவுன் விலையோ ஏறிப்போச்சி
சேர்ந்த பணம் குறைந்து ப்போச்சி
வந்த வருமானம் நின்றுப் போச்சி திருமண மரங்கேறுமோ இல்லை தெருவிலே நின்று ஓலமிடுமோ
வாழ்க்கையெனும் போர்க்களம்
வாய் பிளந்த திமிங்கிலம் போல
சந்தோஷமாக இருப்பவர் எல்லாம் அவரது வாழ்வில் சரியானதல்ல.
அவருடைய வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும்
அவர் காட்டும் மனப்பான்மை
சரியானது என்றால் மட்டுமே
அவர் சந்தோஷப்படுகிறார்
வாழ த்தெரி ந்தோர்க்கு
வாழ்க்கை ஒரு வாழ்வாலயம்;
வாழும் வாழ்க்கை பயணத்தில்
வீழ்ந்து பல் தெறித் தோர்க்கு
வாழ்க்கையெனும் போர்க்களம் அகண்டவாய் திமிங்கிலம் போல
வாழ்க்கை என்பது போர்க்களமா
அலையெழா அமைதியான குளமா ?
வாழ்க்கை எனில் அது வாழ்க்கை போர்க்களம் எனில் அது போர்க்களம்
தீர்மானிக்கும் மனவுறுதியே வேறேது
உறுதி வாய்ந்த கரங்களுடையார்
உரம் பெற்ற தோள்களுடையார்
நம்பிக்கை மனவுறுதியை என்றும் உடையோர்க்கு மலர்களால்
வரவேற்பு இல்லையேல் இவ்
வாழ்க்கையெனும் போர்க்களம்
வாய் பிளந்த திமிங்கிலமே
°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
** வாழ்க்கையெனும் போர்க்களம்**
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு