கவிதை

உள்ளம் முழுதாய் நிறைந்து
ஊண் உயிரெல்லாம் கலந்து
உணர்வில் உறைந்த என்னவள்
மீதுக் கொண்ட குறையாதக்
காதலை கவிதையாக்கி விடவே
காகிதம் ஒன்றைத் தேடிப்
பிடித்தேன் பிடி கொடுக்க
வார்த்தைகள் யாவுக்கும் விடை
கொடுத்து வாக்கியங்கள் வாங்கி
வந்தேன் இத்தென்றலுக்குள்
இத்துணை வன்மமா........!

வரி ஏய்க்க வைத்த காகிதத்தை
வானில் வாரி இறைத்து செல்ல
நானோ ஏதும் சொல்லாது செல்ல....

#நினைப்பில்
எந்தன் காதலைச் சொல்ல
இக்காகிதம் போதாது விரிந்த
வானைக் காகிதமாக்கி கொள்
என்றதுப் போல் வாரி இறைத்தன்
அர்த்தம் ஆகியது இயற்கை...........!

எழுதியவர் : விஷ்ணு (3-Jun-18, 11:00 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kavithai
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே