நிலவு

நிலவே , உன்னை
எப்போதும் இங்கிருந்து
இந்த பூமியிலிருந்து மட்டும்
பார்த்து மகிழ்ந்திட ஆசை
ஏனெனில், இங்கிருந்து
மட்டுமே உன்னை
வட்ட நிலவாய் வெள்ளி நிலவாய்
குளிர் பௌர்ணமி நிலவாய்
பார்த்திட முடியும் , ஆயின்
நாளையே 'ஸ்பைஸ் ஜெட்'இல்
உன்னை அடைய முடியும் என்றாலும்
அங்கு சென்றபின் உன்னைக் காண
முடியாதே, அங்கிருந்து இந்த
பூமியை தான் காணமுடியும்
நீயல்லவோ காதலர்க்கு
என்றும் தேன்நிலா, அதனால்
எப்போதும் உன்னை நான்
என் பூமியில் இருந்தே கண்டு
ஆனந்தம் கொள்வேன் உனைக்காண
காண என்னுள் நீ தரும் உத்வேகம்
காதலருக்கு மட்டுமே புரியும்
நீ என்றும் அதனால் நான்
பாடும் பூமிக்கு நிலவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் (3-Jun-18, 12:01 pm)
Tanglish : nilavu
பார்வை : 167

மேலே