காதல் யாசகம்

முதல் பார்வையிலேயே
என் நெஞ்சில்
விழி வேல் பாய்ந்தது
விண்மீன் நடுவே
வந்த வட்ட நிலா
அந்தப் பளிங்கு
பொம்மையில்
முகம் புதைத்தது
சுவரில் வரைந்த
பெண் ஓவியமொன்று
அங்கும் இங்கும்
சுற்றிச் சுழன்றது
அதன் அழகு விம்பம்
காண்பவர் கண்களில்
மொய்த்தது
அது மையல் பாயை
எண் கண்களில்
அகல விரித்தது
என் இதயத்தை
அது கையோடு
கவர்ந்து சென்றது
கவின் காவியமே
சோலை ஓவியவமே
இனி நீதான் நீணிலமே
எனக்கு வேண்டும்
உன்னால் ஜீவிதமே
உன் காதலை என்னிடம்
தந்து விடுவாயா
பொக்கிஷமாய் அதனை
என் இதய அலுமாரியில்
வைத்துப் பூஜிக்க
நான் தவமாய்க்
காத்துக் கிடக்கிறேன்
அஷ்ரப் அலி