மர்மச் சிரிப்பு

சிரித்து ப்பழக்கம் இல்லை
அதனால் சிரிப்பதில்லை

சிரிக்க வாய் இருந்தும்
சிரிக்க மனம் இருந்தும்
சிரித்து பார்த்து முடியலை

ஆனாலும் ••••••

சிரிக்க தெரியாத மிருக
சாதியில் பிறக்கவில்லை

சிரித்து பார்க்கா தோரைப்
கண்டு உலகம் சிரிக்கிறது

சிரிக்காதது ஒரு காரணமா
இந்த உலகோரால் என்னை
சிரிக்கவைக்க தெரியாதது
ஒரு காரணமாக தெரியாதா
இல்லை மறந்துவிட்டனரா

இல்லை இவர்களை நாம்
சிரிக்க வைத்துவிட்டால் பின்
நம்மால் சிரிக்கவே முடியாது போய்விடுமோ என்ற பயமோ

நம் கதி என்னாவது அச்சமோ
இல்லை கெட்ட எண்ணமோ
கேடுகெட்ட மொக்கை புத்தியோ
பொச்சரிப்போ பொறாமையோ
வேறென்ன வென்று சொல்வது

ஒன்றும் தெரியவில்லை ஆனால்
இருக்கிறதே இருக்கிறது மர்ம
மான ஒரு சிரிப்பு அதுதான் மௌன
சிரிப்பு அதற்கு இன்னொரு
பெயரும் உள்ளது அது தான் கள்ளச்சிரிப்பு மகிமை சிரிப்பு
இது போதும் நம் காலம் செல்ல
இதில் ஆயிரம் கேள்வி பிறந்து
உலகோரை உணர வைக்கும்
°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
(கண்டம்பாக்கத்தான் )
மும்பை மகாராஷ்டிரா

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (4-Jun-18, 11:41 am)
பார்வை : 179

மேலே