மாற்றிக்கொள்
வலப்புறமாக வகிடெடுத்து
தலைசீவி ஜடைபின்னுகிறாய்!
சில்க் காட்டன் சேலைகளையே
உடுத்திக்கொள்கிறாய்!
காலை மாலை இருவேளையும்
இஞ்சி டீயே!
கத்திரிக்காய் புளிக்குழம்பும்
வெண்டைக்காய் பொரியல்
செய்கிறாய்!
இரவானதும் குல்பி ஐஸ்
சாப்பிடுவதென
எனக்கு பிடித்தவளாகவே
நீயின்னும்!மாற்றிக்கொள்
உன் கணவனுக்கு பிடித்தது
எதுவென அறிந்து!