காதலால் அவனின் சில பிதற்றல்

உன்னைப்போல் அழகழகாய்
பெண்களை படைத்தவன்,
அந்த அழகிற்கு நிரந்தரம்
தராததேனோ,ஓடும் காலத்துடன்
அழகையும் ஓடவிட்டு,
தேயும் நிலவாய் ஆக்குவதேனோ,
மூப்பைத்தந்து, மூப்பொடு
மூப்பில் வெறும் சின்னமாய்க்
காணும் பெண்ணின் அழகையும்,
அதை நித்தம் நித்தம்
நிலைக் கண்ணாடியில் பார்த்து
அவள் நெஞ்சம் கலங்குவதும் ....
இறைவா, உன்னை ஒன்று
வரமாய் கேட்க நான் வேண்டுகிறேன்
என்னவளை, என் அழகு
உயிர் ஓவியத்தை அப்படியே
இளமையோடு இருக்கவிடு
அவள் வாழும் நாட்கள் வரை;
அப்படியே,நீ நினைப்பதுபோல்
காலச்சுழற்சியில் அவள்
யவ்வனம் கரையவேண்டுமெனில்,
அந்த தேயும் நிலவை மீண்டும்
முழுநிலவாய் ஆக்குவதுபோல்
அவளுக்கும் அழகை நிலவொக்க
மாற்றிவிடு, ஏனெனில் ஒருபோதும்
என்னவள் அழகு கண்களில்
மூப்பால் கண்ணீர் வந்திடக் கூடாது,
அவள் மூப்பும் எய்திடல் கூடாது

என்னவளே,உனக்காக நான்
அந்த இறைவனிடம் இப்படித்தான்
உன் அழகு என்றும் நிலைத்திருக்க
மன்றாடுவேன், அன்று சதி சாவித்திரி
கணவனை மீட்க செய்த அறப்போர் போல்.

காலம் வேண்டுமெனில் தேய்ந்திடலாம்
உன் மீது நான் கொண்ட காதல்
என்றும் பூரண நிலவே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jun-18, 5:26 am)
பார்வை : 80

மேலே