அவள் கண் கண்ணாடி
உன் முகத்தினை
தவறவிடுவேன் என
எண்ணியிருந்தேன்...
காற்றில் புரண்ட
புத்தகத்தின் ஊடே
படித்திட்ட
அற்புத கவிதையாய்
உன் இருகண்கள்!
எத்தனை முறை
நன்றி நவிழ்ந்தேனென
தெறியவில்லை
அந்த தூசிக்கு...
"எதாவது விழுந்திருச்சானு
பாருங்க..?" என்று
நீ வினவிய தருணத்தில்...