நம் பெருமழைப் புலவர் பொவேசோமசுந்தரனார் நெஞ்சம் நெகிழ்ந்து எழுதிய கவிதையின் ஒரு பகுதி
தஞ்சாவூரில் ஒரு முறை சூறாவளியுடன் கடுமையான மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
அதைப் பார்த்த நம் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நெஞ்சம் நெகிழ்ந்து எழுதிய கவிதையின் ஒரு பகுதி:
“எளியோர்கள் சிறுகுடிலும் எழிலோங்கு
மாளிகையும் இரைந்து சீறித்
துளியோங்கு மழையோடே சூறாவளி
சாடுதலால் சுவர்கள் சாயப்
புளியோங்கு மாமரமே தென்னைமரம்
வாழைமரம் புல்பூண் டோடே
களியோங்கு பைங்கூழும் கரும்புகளும்
பாழாகிக் கழிந்த வாறே!’’
– எழில்.இளங்கோவன்